விடுதலைப்புலிகளை போற்றி துதிபாடவோ நினைவேந்தவோ அனுமதி கிடையாது - வெளியிடப்பட்ட ஆவேசம்!
வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது என சரத் வீரசேகர ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவையும் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
தியாகதீபம் நினைவேந்தல்
இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல, அந்த மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானதும் அல்ல என முன்னாள் அமைச்சரும், பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர ஆவேசம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இலங்கை பௌத்த - சிங்கள நாடு. இந்த நாட்டுக்குள் தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல.
சிறையில் அடைக்க வேண்டும்
தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சட்டங்களை மீறினால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.