தியாகதீபம் திலீபனின் 35வது வருட நினைவேந்தலுக்கு தயாராகிறது நல்லூர் முற்றம்..! (காணொளி)
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈழ மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் 1987 ஆம் ஆண்டு ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து திலீபன் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.
35வது வருட நினைவேந்தல்
அவரது நினைவேந்தல் வாரம் நாளை முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 9.30 க்கு தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் அவர் உண்ணா நோன்பை ஆரம்பித்த நல்லுார் வடக்கு வீதியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் துாபியில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு கூறியுள்ளது.
அத்துடன் நாளை அஞ்சலி ஊர்திப் பவனியும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. இந்த நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லுாரில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
அவரது நினைவுத் துாபியில் பதாதைகள் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பிடத்தக்கது.