வடக்கு மாகாண கடற்றொழில் சம்மேளனத்தின் அவசர எச்சரிக்கை!
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று (15-09-2026) குறித்த ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலார்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இலங்கை சாரணர் சங்கத்தின் 11வது தேசிய ஜம்போரி : உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டது
கடற்தொழிலார்கள்
நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலார்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விருவதாகவும் ஏனைய சிறு தொழில் கடற்தொழிலார்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் இதன் போது அவர்கள் குறிப்பிட்டனர்.

சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுவதாலும் அதனை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என்றும் அவர்கள் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 13 மணி நேரம் முன்