சர்வதேச சட்டங்களை மீறிய அமெரிக்கா...! வெனிசுலா விவகாரத்தில் கொதித்தெழுந்த வடகொரியா
இறையாண்மையின் மீதான கடுமையான அத்துமீறல் என வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் இறையாண்மையின் மீதான அத்துமீறல்.
மிருகத்தனமான தன்மை
அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச சட்ட ஒழுங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.
வெனிசுலாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்.

ஏற்கனவே பலவீனமான பிராந்திய சூழ்நிலையில் ஸ்திரமின்மை அதிகரிப்பது தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.
சர்வதேச சமூகம் நீண்ட காலமாக அடிக்கடி கண்டு வரும் அமெரிக்காவின் முரட்டுத்தனமான மற்றும் மிருகத்தனமான தன்மையை மீண்டும் ஒருமுறை தெளிவாக உறுதிப்படுத்தும் மற்றொரு உதாரணம் இந்த சம்பவம்.
சர்வதேச சட்டங்கள்
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
உலக சமூகம் இந்த சூழ்நிலைக்கு எதிர்வினையாற்ற வேண்டும்.

ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதாகும்.
இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் அத்தோடு இறையாண்மையை மீறுவதற்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்ப வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |