அமெரிக்காவின் வெனிசுலா தாக்குதலுக்கு நெதன்யாகு புகழாரம்!
வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது வலுவான ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அடக்குமுறை
குறித்த அறிக்கையில், சுதந்திரத்திற்காகவும் அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிராகவும் போராடும் ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் துணை நிற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் மற்றும் நீதிக்காக தங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள் என்றும் தங்கள் தீர்க்கமான மன உறுதியையும் துணிச்சலான வீரர்களின் அர்ப்பணிப்பையும் தலைவணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதையும் மற்றும் உலகெங்கிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் இஸ்ரேல் என்றும் உறுதியுடன் இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |