இடைநிலை தூர ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா!
வடகொரியா (North Korea), அதன் கிழக்கு கடற்பிராந்தியத்தை நோக்கி இடைநிலை தூர ஏவுகணை ஒன்றை இரண்டு மாதங்களின் பின்னர் இன்று ஏவியுள்ளது.
எனினும் குறித்த ஏவுகணை ஜப்பானிய நேரப்படி இன்று மதியம் (06.01.2025) கடலில் வீழ்ந்துள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளிங்கன் தென்கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை சோதனை
இன்று காலை, தென்கொரியாவின் பதில் ஜனாதிபதி சோய் சாங் மோக்கை சந்தித்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளிங்கன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, அவர் அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்குமான இருதரப்பு உறவுகள், கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பில் விரிவாக ஆராயந்துள்ளார்.
இந்தநிலையில், வடகொரியா தற்போது ஏவுகணை சோதனைகளை பலப்படுத்தியுள்ளதாகவும், இன்றைய ஏவுகணை சோதனை தொடர்பான மேலதிக தகவல்களை அமெரிக்காவுடனும் ஜப்பானுடனும் பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த மாதம் தென் கொரியாவின் பதவிநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல் நடைமுறைப்படுத்திய அவசாரகால இராணுவச் சட்டத்திற்கு பின்னர் பல வாரங்களாக நாட்டை சர்ச்சைக்குள்ளாகிய அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் குறித்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |