மீண்டும் மிரட்டுகிறது வடகொரியா -ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு
உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான், வடகொரியாவின் இந்த மிரட்டலுக்கு நேரடியாகவே பாதிப்பை சந்திக்கும் நாடுகளாகும்
இந்நிலையில், வடகொரியா சந்தேகத்திற்கு இடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது.
ஜப்பான் மீது பறந்த ஏவுகணை

அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கியோடோ நிறுவனம், டோக்கியோவில் உள்ள அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து கொண்டிருந்ததாகக் கூறியது.
இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு தயார் நிலையில் இருப்பது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்