அமெரிக்காவை முறியடிக்க வடகொரியாவின் புதிய திட்டம்
அமெரிக்காவின் விரோதக் கொள்கையுடனான முகத்தை முறியடிக்கும் வகையில் எவராலும் வீழ்த்த முடியாத இராணுவக் கட்டமைப்பை உருவாக்கவுள்ளதாக மர்ம தேசம் என அறியப்படும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகள் அடங்கிய பாதுகாப்பு கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆயுதங்களின் அபிவிருத்தி என்பது சுய பாதுகாப்புக்காகவே தவிர, யுத்தத்தை உருவாக்குவது நோக்கம் இல்லை எனவும், தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், கிம் ஜோங் உன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புதிய ஹைய்ப்ஃபோ சொனிக் எனப்படும் அதி மிகையொலி ஏவுகணையை வடகொரிய கடந்த மாதம் பரிசேதித்திருந்தது.
இந்த நிலையில் அண்டை நாட்டுடன் சண்டையிட தாங்கள் விரும்பவில்லை என்று கிம் ஜோங் உன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா செயல்படுவதாகவும் கிம் குற்றம்சாட்டினார்.