வெளிவந்தது உலகத்தையே மிரள வைக்கும் வடகொரியாவின் புதிய ஆயுதம்!
வடகொரியா தனது தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தலைநகர் பியாங்யாஙில் பாரிய ராணுவ அணிவகுப்பை நடத்தியது.
அதில் ‘ஹ்வாசாங்-20’ எனப்படும் புதிய கண்டம்-விட்டு-கடக்கும் அணு ஏவுகணையை முதல் முறையாக பொதுமக்கள் முன் காட்சிப்படுத்தியது.
தாக்கி அழிக்கும் திறன்
இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் திறனுடையது மற்றும் சுமார் 15,000 கி.மீ. தூரம் வரை தாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Credit: Reddit
குறித்த ஆயுதத்தால் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையே முற்றாக தாக்கி அழித்திட முடியும் எனவும் கூறப்படுகிறது.
கவலையில் உலக நாடுகள்
தென்கொரியா–அமெரிக்கா கூட்டுப் பயிற்சிகளை எதிர்த்து தன் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் முயற்சியாக இதை வடகொரியா முன்னெடுத்துள்ளது.
Image Credit: Reddit
இந்த நிலையில், வடகொரியா அறிமுகப்படுத்திய புதிய ஆயுதம் உலக நாடுகளின் பாதுகாப்பு கவலையை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
