உலகை அதிரவைத்த வடகொரியாவின் மற்றுமொரு பரிசோதனை
train
northkorea
missle
By Jaso
ரயிலில் இருந்து ஏவும் புதிய வகை ஏவுகணையை வட கொரியா சோதனை செய்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகொரியாவின் ஒரு மலைப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ரயிலின் கூரையில் இருந்து ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்ததாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணை சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து வட கொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் இருந்த இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.