தீபச்செல்வனுக்கு யாழ் பல்கலைக்கலையில் மதிப்பளித்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பிற்றென் மநாட்டில் ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனுக்கு பெட்னா எனப்படும் வடஅமெரிக்க தமிழ்ச் சங்கம் மதிப்பளிப்பை வழங்கியுள்ளது.
வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தொழில் முனைவோருக்கான பிற்றென் எனப்படும் உலக அளவிலான தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாநாடு நேற்று (19.01.2024) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு மதிப்பளிப்பு வழங்கப்பட்டடது. கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் மாநாட்டில் தீபச்செல்வன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
மதிப்பளித்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கம்
எனினும் வீசா அனுமதி மறுக்கப்பட்டமையால் தீபச்செல்வன் அம் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் அவரை மதிப்பளித்த வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் பால சுவாமிநாதன், விரைவில் அமெரிக்காவில் இடம்பெறும் விழாவில் தீபச்செல்வன் கலந்துகொள்ளுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் படைப்பிலக்கியத்தில் இயங்கி வரும் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனை மதிப்பளிப்பதிலும் அவரை வடஅமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பதிலும் தாம் பெருமையும் ஆர்வமும் கொள்வதாக இதன் போது டாக்டர் பால சுவாமிநாதன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |