ஆளுநரின் பாரபட்சமான செயற்பாடு : யாழ்.மாநகரசபையில் அமளி

Jaffna Hindu College University of Jaffna Nagalingam Vedanayagam
By Independent Writer May 14, 2026 04:16 PM GMT
Report
Courtesy: linton

 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வுகளுக்கு மாநகர வரிக்குறைப்பை வழங்குவதற்கு மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றிய போதும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதனை வழங்க முடியாது என நிராகரித்துள்ளதாக யாழ் மாநகர சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

இன்று(14) வியாழக்கிழமை யாழ் மாநகர சபை மாதாந்த அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் இடம்பெற்ற நிலையில் இவ்வாறு வாத பிரதிவாதம் இடம்பெற்றது.

கல்வி நிகழ்வுகளுக்கு வரிக் குறைப்பு வழங்க மறுக்கும் ஆளுநர்

 அமர்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர், யாழ் மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரிகள் பங்குபற்றிய பெருந்துடுப்பாட்டப் போட்டி யாழ் இந்துக் கல்லூரி ஏற்பாடு செய்த இசை நிகழ்வு மற்றும் யாழ் மருத்துவ பீடம் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு மாநகர சபையால் அறவிடப்படும் வரியை குறைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆளுநரின் பாரபட்சமான செயற்பாடு : யாழ்.மாநகரசபையில் அமளி | Northern Governors Discriminatory Actions

அதற்காக சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் அதனை குறைப்பதற்கு சபை தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் அவ்வாறு வழங்க முடியாது சபையின் வருமானத்தை குறைப்பதை அனுபவிக்க முடியாது என அனுமதி தரவில்லை.

ஆனால் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்த புது வருட நிகழ்வுக்கு மைதான குத்தகையை மாநகர சபைக்கு வழங்காது ஆளுநர் தன்னிச்சையாக அனுமதியை வழங்கியுள்ளார்.

 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாநகரசபை தீர்மானங்களை மீறி வடமாகாண ஆளுநர் அரசாங்கத்தின் எடுபிடியாக சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்ததை ஏற்க முடியாது.

நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள் : ஆச்சரியம் ஆனால் உண்மை

நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள் : ஆச்சரியம் ஆனால் உண்மை

 தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாக மீறினால் மக்கள் சபை எதற்கு

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களால் ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடியாது என மாநகர சபை தீர்மானத்தை மீறி உத்தரவு போடும் ஆளுநர் எவ்வாறு இராணுவ நிகழ்வுக்கு எவ்விதவிதமான பணமும் அறவிடாது அனுமதி வழங்க முடியும். உயரிய சபையில் முதல்வர் முன்னிலையில் எடுக்கப்படும் தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாக மீறுவார் ஆயின் மக்கள் சபை எதற்கு என கேள்வி எழுப்பினார்.

ஆளுநரின் பாரபட்சமான செயற்பாடு : யாழ்.மாநகரசபையில் அமளி | Northern Governors Discriminatory Actions

இதன்போது குறுக்கீடு செய்த முதல்வர் மதிவதனி சில விடயங்கள் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட வேண்டும் என்பது சட்டம்.ஆளுநர் எதைச் சொல்லுகிறாரோ அதை நடைமுறைப்படுத்தினோம் என்றார்.

இதன்போது எழுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றும் ஒரு உறுப்பினர், ஆளுநர் எதைச் சொன்னாலும் செய்யலாம் என்றால் நீங்கள் எதற்கு இந்த சபை எதற்கு கலைத்துவிட்டு ஆளுநர் பார்க்கட்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் சபையில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுமை தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்த நிலையில் சபை அமைதி நிலையை அடைந்தது.

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி! வயலில் வேலை செய்தவேளை துயரம்

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி! வயலில் வேலை செய்தவேளை துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020