முல்லைத்தீவில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண விவசாய கண்காட்சி
Sri Lankan Tamils
Mullaitivu
By Independent Writer
"காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி" எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண விவசாய கண்காட்சி முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 26.01.2026. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் விவசாயப் பண்ணையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண விவசாயத் திணைக்களம் கீழ் வரும் நிறுவனங்களுடன் இணைந்து இக் கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி