முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த வடக்கு மாகாண ஆளுநர்!
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்க முன்வருமாறு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் வர்த்தகப் பெருவிழாவான 'யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி - 2026', 16 ஆவது ஆண்டாக இம்முறை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று (23.01.2026) காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதாரம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் , “யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும்.

யாழ்ப்பாணத்தின் அடுத்தக்கட்ட சுபீட்சத்தை வடிவமைக்கவுள்ள எமது இளைஞர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் இப்போது முதலீட்டுக்குச் சாதகமான சூழல் காணப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம், வடக்கு மாகாணத்தில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எமது மாகாண இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






