வடக்கு ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
Sri Lanka
Northern Province of Sri Lanka
Teachers
By Theepan
வடக்கில் சேவையின் தேவை எனத் தெரிவித்து, ஆசிரியர்கள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு எழுத்துமூல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு முன்னிலை
அத்தோடு அவர்களுடன் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரையும் இன்று (30-03-2026) விசாரணைக்கு முன்னிலையாகுமாறு யாழ். பிராந்திய அலுவலகம் கோரியுள்ளது.

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உள்ள நியாயத்தன்மை மற்றும் விதிமுறை மீறல்கள் குறித்து இந்த விசாரணையில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்