பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின்(Spain), அயர்லாந்து(Ireland) மற்றும் நோர்வே(Norway) ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ள அதே வேளை இந்த 3 நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகளை இஸ்ரேல்(israel) திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் (Jonas Gahr Store)கூறுகையில், "பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பலஸ்தீனத்துக்கு உள்ளது. பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அரபு அமைதி திட்டத்திற்கு நோர்வே ஆதரவு அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்
அதே போல் அயர்லாந்து அரசாங்கமும் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ்(Simon Harris) கூறுகையில்,
"இது அயர்லாந்து மற்றும் பலஸ்தீனத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்" என்று தெரிவித்தார். மேலும் ஸ்பெயின் அரசு வரும் 28-ம் திகதி பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Sanchez) அறிவித்துள்ளார்.
நோர்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதுவர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடுப்பில் இஸ்ரேல் அரசாங்கம்
இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ்(Katz) கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு பலன் இருக்கிறது என்ற செய்தியை அயர்லாந்து மற்றும் நோர்வே அரசுகள் இந்த உலகிற்கு சொல்ல வருகின்றன.
பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காசாவில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும். ஸ்பெயின் அரசாங்கமும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயின் நாட்டிற்கான இஸ்ரேலின் தூதுவரையும் திரும்ப பெறுவோம்" என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |