கோட்டாபயவின் அறிவுறுத்தல்களுக்கு கிடைக்காத மரியாதை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கை மின்சாரசபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு சுசந்த பெரேராவை நியமித்தமைக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மரபுகளை மீறி தகுதி குறைந்த ஒருவர் பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் மின்சாரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு இந்த நியமனமே பிரதான ஏது என குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, தகுதியில்லாத ஒருவரை பதவியில் அமர்த்திய இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகளே இந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.