விவசாயத் துறைக்கு வெற்றிகரமான பருவம்; அரிசி இறக்குமதி தேவையில்லை; விவசாய அமைச்சர்!
அரிசி இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்த தேவையில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை கால போகத்தில் அதிகளவான விளைச்சல் எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தினால் இலங்கையின் விவசாயத்துறை அழிவடையாத காரணத்தினால் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த மகா பருவத்தில் விவசாயிகள் 800,000 ஹெக்டேர் நெற்பயிர்களை பயிரிடுவார்கள் என்றும், ஏற்கனவே 748,000 ஹெக்டேர் நிலங்கள் பயிரிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயத் துறைக்கு வெற்றிகரமான பருவமாக இந்த பருவம் அமையும் எனவும், அரிசி இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
