கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் : மகிந்த தெடார்பில் சட்டமா அதிபர் எடுத்த முடிவு

Mahinda Rajapaksa Gota Go Gama
By Jaso Sep 27, 2026 04:42 PM GMT
Report

'அரகலய' (மக்கள் போராட்டம்) காலப்பகுதியில், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோகம' போராட்டக் களத்தில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற வேளையில், மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும் அப்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதமராகப் பதவி வகித்து வந்தார்.

மகிந்த மீதான குற்றச்சாட்டிற்கு சான்றுகள் போதுமானதாக இல்லை 

பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்த இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மகிந்த ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டுவதற்கு, விசாரணையாளர்கள் சமர்ப்பித்த சான்றுகள் போதுமானதாக இல்லை என்று சட்டமா அதிபர் தீர்மானித்ததை அடுத்தே, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருப்பதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் : மகிந்த தெடார்பில் சட்டமா அதிபர் எடுத்த முடிவு | Not To Indict Mahinda 2022 Gotagogama Attack

அப்போதைய பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாவிட்டாலும், சம்பவ இடத்திலிருந்த காணொளிக் காட்சிகளின் நிபுணர் பகுப்பாய்வு, சூழ்நிலைச் சான்றுகள் மற்றும் நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், வேறு 34 சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 34 பேர் மீது குற்றச்சாட்டு மூவர் உயிரிழப்பு

குறிக்கப்பட்ட 34 சந்தேக நபர்களில் மூவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். அவர்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசத் மற்றும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் வசந்த ஹடபங்கொட ஆகியோர் ஆவர்.

கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் : மகிந்த தெடார்பில் சட்டமா அதிபர் எடுத்த முடிவு | Not To Indict Mahinda 2022 Gotagogama Attack

மீதமுள்ள 31 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒரு கூட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டவிரோதக் கூட்டத்தில் அங்கத்தினராக இருத்தல், கொலை முயற்சி மற்றும் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 327 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளது.

மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை

இந்த வழக்கை விசாரிப்பதற்காக 'மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வை' (Trial-at-Bar) நியமிக்குமாறு, தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவிடம் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக ' சண்டே டைம்ஸ்' (The Sunday Times) செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் : மகிந்த தெடார்பில் சட்டமா அதிபர் எடுத்த முடிவு | Not To Indict Mahinda 2022 Gotagogama Attack

  குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ள சந்தேக நபர்களில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன், முன்னாள் மொரட்டுவை மேயர் சமன் லால் பெர்னாண்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமல் புஷ்பகுமார டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மற்றும் 'அராபி வசந்த' என்று அழைக்கப்படும் அசங்க நலக்க விஜேசிங்க ஆகியோர் அடங்குவர். 

பத்தேகம துப்பாக்கிச்சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு! வெளியான மேலதிக தகவல்

பத்தேகம துப்பாக்கிச்சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு! வெளியான மேலதிக தகவல்

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் உட்பட 09 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025