அரசாங்கம் வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு
food
goverment
shortage
By Sumithiran
அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை இருப்பதாக வெளியிட்ட செய்தியில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.