ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் - அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
government
notice
Mahindananda Aluthgamage
By Vanan
இரசாயான உரத்தை நிறுத்தும் அரச தலைவரின் நோக்கம் நல்லதே, ஆனால் அவர் எடுத்த தீர்மானத்துடன் எம் அனைவராலும் ஒருமித்த நிலைப்பாட்டில் நிற்க முடியாமல் போயுள்ளது.
இருந்தாலும் எடுத்த தீர்மானத்தில் இருந்து தாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்கிறார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே (Mahindananda Aluthgamage).
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது கொடும்பாவியை எரித்தாலும், உருவத்தை சேதப்படுத்தினாலும் சேதனப் பசளையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கைவிடோம் எனக் கூறினார்.
மேலும் எக்காரணம் கொண்டும் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு வராது என்றும், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் கூட, மக்களை பட்டினியில் போடாது அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.