மின் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள் செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தேசிய கட்டமைப்பிலிருந்து இவர்களுக்கு கிடைக்கும் மின்சார விநியோகத்தை துண்டித்து, அவர்களிடம் காணப்படும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டிருந்தது . நேற்றைய தினம் இந்த 40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
