தென்னிலங்கையில் நிகழவுள்ள அரசியல் மாற்றம் -சஜித் தரப்பு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு(photo)
SJB
Sri Lanka
Harin Fernando
By Sumithiran
இலங்கையில் தற்போது கொதி நிலையில் உள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.
இதற்கமைவாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி