மின்வெட்டு தொடர்பில் வெளிவந்த அபாய அறிவிப்பு
Ali Sabry
Power cut Sri Lanka
Sri Lanka
By Sumithiran
எதிர்காலத்தில் 15 மணிநேரங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி