அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய தகவல்
நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் பாதுகாப்பான போக்குவரத்தைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான போக்குவரத்து
கடந்த சில நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலையில் 53 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வாகன சாரதிகள் அனைவரும் பாதுகாப்பான போக்குவரத்தைக் கடைப்பிடிக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |