கிடைத்தது அனுமதி : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழிற்பயிற்சி நெறிகள்
சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் பரீட்சையின் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் தொழிற்பயிற்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.