புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளைய தினம் (21.11.2024) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், அறிவித்தலொன்றை விடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல்
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இந்த தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 1 மணி நேரம் முன்