யாழ்.மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவித்தல்

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna
By Sumithiran Jan 28, 2023 07:40 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார்.

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அடித்துத் துன்புறுத்தும் கும்பல் 

யாழ்.மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவித்தல் | Notification Issued People Of Jaffna District

மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அவர்களை அழைத்து வந்து மருதனார்மடம் தோட்டக் காணிக்குள் வைத்து அடித்துத் துன்புறுத்தும் கும்பல் தொடர்பில் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகின.

அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பொதுமக்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக அடித்து துன்புறுத்தும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை பிரிவுகளுக்கு உத்தரவிட்டேன்.

அதனடிப்படையில் முதன்மை சந்தேக நபர் உள்பட ஐந்து பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவித்தல் | Notification Issued People Of Jaffna District

இதுபோன்று ஏதாவது ஒரு வகையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைப்பாடு வழங்குவதில் சிக்கல் இருந்தால் நேரடியாக வடமாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்துக்கு தகவல்களை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நான் தயாராக உள்ளேன் - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016