அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Sathangani
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இணையவழி முறைமையின் ஊடாக இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவினர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நன்மை பெறுவோர்
மேலும் தற்போது 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுகின்றனர் எனக் கூறினார்.
அத்துடன் அடையாள அட்டை இல்லாமை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பிரச்சினைகளால் இதுவரை 300,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்