யாழில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை: பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்
யாழ் மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு பிரதமரிடம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P. S. M. Charles) கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்ற யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்து போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதால் “உரித்து” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் , பிரதமரிடம் கூறினார்.
ஆளணிப் பற்றாக்குறை
அத்துடன் ஏனைய பல திணைக்களங்களில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் (Dinesh Gunawardena) விசேட பங்குபற்றுதலுடன், இணைத் தலைவர்களான ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |