யாழில் ஆலய நகைகள் மாயம்: நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்

Sri Lanka Police Jaffna Rambukkana Protest Nothern Province
By Aadhithya Jul 12, 2024 11:39 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்துறை (Kayts) பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின்  நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்று (12) காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமாகி பிரதான வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

இதன்போது, ஆலயத்தின் முகவாயிலில், பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா என கோஷங்களை எழுப்பியவாறு ஆண் பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்துள்ளனர்.

யாழில் யுவதியைக் கடத்திய மூவர் கைது

யாழில் யுவதியைக் கடத்திய மூவர் கைது

பணப்பெட்டித் திறப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் பணப்பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் சிலருக்கு தெரிவிக்கப்பட்டது.

யாழில் ஆலய நகைகள் மாயம்: நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள் | Temple Jewel Theft Protest In Jaffna

எனினும் உடனடியாக காவல்துறையினருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை. சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள் பணங்கள் என்பன காணாமல் போன தான தகவல்கள் சமூகத்தில் பரவ ஆரம்பித்தது.

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து குறித்த விடயம் தொடர்பில் தலைவரிடம் வினவிய மக்கள் பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் பணங்கள் காணாமல் போனது என கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என பதிலளித்தார்.

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்கள்

வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் கொழும்பிலுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிழையான தகவல்கள்

ஆலய நிர்வாகம்

எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

யாழில் ஆலய நகைகள் மாயம்: நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள் | Temple Jewel Theft Protest In Jaffna

ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகள் பணங்களை ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

ஆதலால் குறித்த களவானது ஆலய நிர்வாகத்திற்கு தெரிந்து இடம் பெற்றிருக்க கூடும் என்பது எமது சந்தேகமாக இருக்கம் நிலையில் காவல்துறையினர் கால இழுத்தடிப்பைச் செய்யாமல் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என  குறிப்பிட்டு்ள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மீண்டும் வருவார் வைத்தியர் அர்ச்சுனா! ஆணித்தரமாக கூறும் அமைச்சர்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மீண்டும் வருவார் வைத்தியர் அர்ச்சுனா! ஆணித்தரமாக கூறும் அமைச்சர்

பிரதேச செயலாளர்

இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் தொலைபேசி ஊடாக தொடர்புக்கொள்ளப்பட்டது.  

யாழில் ஆலய நகைகள் மாயம்: நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள் | Temple Jewel Theft Protest In Jaffna

அப்போது, குறித்த ஆலயத்தில் நகை பணம் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி