அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை (Ampara) மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக தேசிய மக்கள் சக்தி (NPP) பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இதற்கமைய கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (26) வரை ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கு சென்றும் தமது பிரசாரங்களை மேற்கொண்டனர்.
துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
இதேவேளை ''நாடு அனுரவோடு அவரின் வெற்றியில் நாமும் பங்காளியாக இருப்போம்'', ''வாரீர் மாற்றத்தை நோக்கி பயணிப்போம்'', ''வளமான நாடு அழகான வாழ்க்கை'' போன்ற வாசகங்கள் பிரசார துண்டுப்பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ (Wasantha Piyatissa), கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து பிரசார செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |