ஈழத்தமிழர் விவகாரத்தை கச்சிதமாக கையாளும் அநுரவின் NPP அரசு
ஈழத்தமிழர் விவகாரத்தை ஆளும் NPP அரசு கன கச்சிதமாக கையாளுகிறது. இன அழிப்பிற்கான நீதி வேண்டிப் போராடும் அதே இனத்திலிருந்து குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பின் பிரதிநிதி தலைப்படுகிறார் .
இது ஆபத்தான சமிக்ஞை மட்டுமல்ல கடந்த 16 ஆண்டுகளாக நீங்கள் கோரிவந்த இன அழிப்பிற்கான நீதி என்பது சமச்சீரற்றதாக்கப்படுகிறது.
ஶ்ரீலங்காவின் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது , அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது என்பதையெல்லாம் இந்த ஒற்றை விடயத்தில் ஒன்றுமில்லாமல் செய்து விட்டது ஒரு நல்லாட்சி முகமூடி போர்த்திய இந்த அரசு ஈழத்தமிழர்களே இன்னமும் பிளவுகளில் நீங்கள் ஒருவரை ஒருவர் பிடித்திண்ண முயலும் நேரத்தில் கிடைக்க வேண்டிய நீதியும் கேட்பாரற்று போகிறது.
கொடிய இன அழிப்பின் கோர முகத்தை தரிசித்த ஒரு இனத்தில் இருந்து ஒரு இளைஞன் இன்று கொன்றொழித்தவர்களின் முகமாக சர்வதேச படலைகளை தட்டிக்கொண்டிருக்கிறான்.
எப்படி லக்ஸ்மன் கதிர்காமர் பயன்படுத்தப்பட்டாரோ அதே பாணியை அந்த அரசின் கூட்டிலிருந்தவர்கள் மீள அரங்கேற்றுகிறார்கள்.
ஈழத்தமிழர்களே நீங்கள் பொருமைப்பட்டு புகழாரம் சூடிய உங்கள் மனம்வென்ற மாற்றான் கட்சி நீங்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் தான் என்பதை வேறு பிரித்துக்காட்ட ஆரம்பித்துவிட்டது.
இன்று கனேடிய தூதுவரை அழைத்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் நிச்சயமற்ற உறுதிப்படுத்தப்படாத இனப்படுகொலை தீர்மானத்தை நினைவுச் சின்னமாக்கியதை கண்டித்திருக்கிறார்.
ஈழத்தமிழினம் கொத்துக்கொத்தாய் கந்தக கரியமில வாயுவை சுவாசித்து மடிந்து கிடந்த்தை மனசாட்சியே இல்லாமல் நிராகரிக்கும் ஒரு கூட்டத்தை தான் ஊழலற்ற ஆட்சிக்காக கொண்டாடித் தீர்க்கிறீர்கள் ஈழத்தமிழர்கள் வேண்டுவது இலங்கையில் ஊழலற்ற ஆட்சியா அல்லது கொடுநஞ்சிறைத்து கொல்லப்பட்ட நம் சனங்களுக்கும் குழந்தைகளுக்குமான நீதியா?
விரைவில் ஐநா மனித உரிமைகள் மன்றிலும் இந்த பிரதியமைச்சரை சந்திக்கப் போகிறீர்கள் இன அழிப்பு நிகழ்த்தப்படவில்லை என்று நிறுவ காத்திருக்கும் ஶ்ரீலங்காவின் வெளிவிவகார குழுவின் தலைவராக நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள் அந்த ஆன்மாக்கள் தங்களையே நொந்துகொள்ளட்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 15 May, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
