ஜே.வி.பி இன் அடுத்த முகம்தான் என்.பி.பி : பிரதேச சபைத் தவிசாளர் மதிமேனன்
பிரஜா சக்தியில் உள்ள கிராமிய தலைவர்கள், போதை வியாபாரிகளும், போலிப் பட்டம் பெற்றவர்களும்தான் தற்போது புனிதர்களாக உருவெடுக்கிறார்கள் அதனை நாம் அனுமதிக்கமாட்டோம். ஜே.வி.பி இன் அடுத்த முகம்தான் என்.பி.பி அதனை மக்கள் நினைவில் கொள்ளுங்கள். என போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் சங்க குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கம் நிகழ்வு இன்று புதன்கிழமை(31.12.2025) நடைபெற்றது. இதன்போத கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளையானின் வீட்டு காசு இல்லை
எமது பிரதேச சபையிலுள்ள நிதி பிள்ளையானின் வீட்டு காசு இல்லை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் பணமும் அல்ல இது எமது மக்களின் வரிப்பணமாகும். யார் எம்மை எதிர்த்தாலும் மக்களுக்கான எமது சேவை தொடரும் எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் நிதிப் பங்களிப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 மீனவ குடும்பங்களுக்கு தம்பலவத்தை மீனவர் சங்க கட்டடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் வேணுகா, மீனவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




