தையிட்டி விகாரை சர்ச்சை : கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்

Sri Lankan Tamils Jaffna Buddhism
By Kajinthan Dec 31, 2025 02:41 PM GMT
Report

தையிட்டி விகாரை அமைந்திருக்கும் இடம் தவிர்ந்த, அதைச் சூழவுள்ள ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்கு காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை அடுத்து குறித்த காணிகளை விடுவிப்பதற்கான யோசனை அடங்கிய வரைபொன்று மாவட்டச் செயலாளரினால் துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையே இன்று (31) நடைபெற்றது.

இதன்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் தெளிவுபடுத்தல் ஊடக சந்திப்பை முன்னெடுத்த காணி உரிமையாளர்கள் மேலும் கூறுகையில்,

மூன்று வருடங்களாக போராட்டம்

 தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்க வேண்டும் என நாம் கடந்த மூன்று வருடங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் இதுவரை எந்தவிதமான முடிவுகளோ தீர்வுகளோ கிடைக்கவில்லை.

தையிட்டி விகாரை சர்ச்சை : கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள் | Tahiti Vihara Controversy Lands To Be Released

ஆனாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட உதவி அரச அதிபராக (காணி) முரளிதரன் இருந்தபோது காணிகள் தொடர்பில் துல்லியமான தரவுகளுடன் தீர்வுக்கான முயற்சி எடுக்கப்பட்டும்,அது ஏதோ ஒரு விதத்தில் கைநழுவிப் போனது.

காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

அதன் பின்னர் தற்போது இந்த முயற்சி மாவட்டச் செயலர் பிரதீபனால் முன்னெடுக்கப்பட்டு இன்று காணி உரிமையாளர்களான எம்முடன் கலந்துரையாடப்பட்டது.

தையிட்டி விகாரை சர்ச்சை : கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள் | Tahiti Vihara Controversy Lands To Be Released

 இதன்போது காணிகளின் உரிமம் மக்களுக்கானதென்பது உரிமையாளர்களின் உரிமங்களின் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்ட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதையடுத்து அக்காணிகளின் விடுவிப்புக்கான பொறிமுறை குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது விகாரை இருக்கும் குறித்த நிலப்பரப்பு தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காணிகளை மிக விரைவில் விடுவிக்கும் யோசனை

அதன் அடிப்படையில் விகாரைக்கு மேற்குப் புறமுள்ள காணிகளை மிக விரைவில் விடுவிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

தையிட்டி விகாரை சர்ச்சை : கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள் | Tahiti Vihara Controversy Lands To Be Released

அதன் பின்னர் மிகுதிக் காணிகள் 4 கட்டங்களாக விடுவிப்பதற்கும் குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய பல கட்டடங்களை அகற்றி வேறிடத்துக்கு கொண்டு செல்லும் வகையிலான செயற்பாடுகளுக்க்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்டங்கள் வரையறை வகுக்கப்படுள்ளது.

விகாரை அமைந்துள்ள காணி

இதேநேரம் விகாரை அமைந்துள்ள காணி மூன்று தரபினருக்குரியதாக இருக்கின்றது. ஆனாலும் அந்த காணிக்கான மாற்றுக் காணி குறித்தோ, நஸ்ட ஈடு தொடர்பிலும் எந்தவிதமான தீர்மானமோ யோசனையோ எடுக்கப்படவில்லை

தையிட்டி விகாரை சர்ச்சை : கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள் | Tahiti Vihara Controversy Lands To Be Released

அத்துடன் இந்த முயற்சி ஒரு யோசனையாகவே இன்று தீர்மானிக்கப்பட்டு துறைசார் தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

இது இறுதி முடிவாக அல்லாது யோசனையாகவே இருப்பதனால் நாம் எதிர்வரும் 3 ஆம் நாளன்று ஏற்கனவே தீர்மானித்திருந்த தையிட்டிப் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த தீர்மானித்துள்ளோம்.

 அத்துடன் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு காணி உரிமையாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

யாழில் கடற்றொழில் சமுகமே இல்லாமல் போகும் அபாயம்!

யாழில் கடற்றொழில் சமுகமே இல்லாமல் போகும் அபாயம்!

தையிட்டி விகாரையில் முளைக்கும் புத்தர் சிலை - வதந்தி என்கிறார் விகாராதிபதி

தையிட்டி விகாரையில் முளைக்கும் புத்தர் சிலை - வதந்தி என்கிறார் விகாராதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026