ஈகையர்களுக்கான நினைவேந்தலில் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
புதிய இணைப்பு
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, மணியோசை எழுப்பப்பட்டு, பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து உயிர்நீத்த மாவீரர்களின் உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
முதல் இணைப்பு
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் இன்று (27) மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகி வருகிறது.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச் சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அதன் பின் அகவணக்கம் செலுத்துப்பட்ட பின்னர் பொதுச் சுடரும், ஏனைய நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |