சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
புதிய இணைப்பு
யாழ்.தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்திப்பட்டது.
தொடர்ந்து 03 பெண் மாவீரர்களின் தாயாரான இராசரத்தினம் புஸ்பராணியால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் பெற்றோர் உரித்துடையோரால் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை கடலில் காவியமானோர் நினைவாகவும் சம நேரத்தில் ஈகைச்சுடர் கடற்கரும்புலி மாவீரரின் தாயார் யேசுராசா அருளம்மாவால் ஏற்றப்பட்டுள்ளது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.





முதலாம் இணைப்பு
யாழ். தீவகம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் மாவீரர் தின ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.
நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீவகம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வலமையாக இடம்பெறும் சாட்டி மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் இடம் தொடர்பில் ஏற்பட்ட தடைகளுக்கு மத்தியில் ஏற்பாட்டுக்குழுவின் திட்டத்துக்கு அமைய நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |