தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு

Vijitha Herath Government Of Sri Lanka National People's Power - NPP
By Sumithiran Nov 11, 2024 02:30 PM GMT
Report

வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய ஐக்கியத்தை அடைவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வெல்வதில் தேசிய மக்கள் சக்தி 'மிகவும் நம்பிக்கையுடன்' இருப்பதாகவும் ஆனால் அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்காக தமிழ்,மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஹேரத் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு இல்லை

எவ்வாறாயினும், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அழைப்பு இந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு | Npp Ready For National Unity Govt

“தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம், ஏனெனில் இதன் மூலம் இந்த நாட்டில் நாம் இலக்காகக் கொண்ட தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் வேலை செய்ய முடியும்" என்று ஹேரத் தெரிவித்தார்.

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஜனாதிபதி அநுரவின் நம்பிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) கடந்த வாரங்களில் தனது நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கான பிரச்சார உரைகளில் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என நம்புவதாகக் குறிப்பிட்டு, இது வலுவான, சக்திவாய்ந்த அரசாங்கத்திற்கான நேரம், ஆனால் எதிர்க்கட்சிக்கான நேரம் அல்ல என்று கூறினார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு | Npp Ready For National Unity Govt

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யம் குறைந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

ரணில் வலியுறுத்தும் விடயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(ranil wickremesinghe) கடந்த வாரம் புதிய நாடாளுமன்றத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனுபவம் வாய்ந்தவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு | Npp Ready For National Unity Govt

வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், இரண்டு நாள் மௌன காலம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024