பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு
பயங்கரவாத தடைச் சட்டத்தை நாம் ஆட்சிக்கு வந்தால் நீக்குவோம் என குறிப்பிட்ட ஒரே ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரம் தான் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் தெரிவித்துள்ளார்.
மூதூரில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “திருகோணமலை மாவட்டத்தில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இன்று இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி
இனவாத ரீதியாக கலவரங்கள் ஏற்பட்ட போது அதற்காக குரல் கொடுத்த கட்சி தேசிய மக்கள் சக்தியாகும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது.
தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் முஸ்லிம் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்காது.
அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குகிற கட்சியாகும். இனவாத கருத்துக்களை பரப்புகின்ற அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
நீங்கள் அவ்வாறு நாடாளுமன்றம் செல்ல நினைத்தால் அது சாத்தியமாகாது. வீடு வீடாக சென்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என இனவாத கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
அதில் சிறுபான்மையினரும் இருப்பார்கள் ,தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |