அநுர அரசின் முதல் மே தினக் கூட்டம் : கொழும்பில் அலை கடலென திரளும் மக்கள் - நேரலை
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி (National People's Power) உள்ளிட்ட பல பிரதான கட்சிகள் கொழும்பில் தமது மே தின பேரணி மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் இன்று மாலை 3.30 க்கு கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) ஆரம்பமானது.
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காகசுமார் 5,532 பேருந்துகள் வரும் என்று காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கொழும்பை பொருத்தமட்டில் அதிகமான மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தினை கீழ் உள்ள இணைப்பில் நேரலையாக காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
