யாழில் ஆளுமையற்ற ஆளுங்கட்சி எம்.பிக்கள் : சாடும் முன்னாள் எம்.பி
தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுமையற்றவர்கள் சிறிய அபிவிருத்தி கூட்டத்தினை கூட நடாத்த முடியாது திண்டாடுகின்றனர் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.
நெல்லியடி (Nelliaddy) - மாலு சந்தியில் இடம்பெற்ற தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்பொழுது நாங்கள் சரியானவர்களை சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் . வெறுமனே காலம் காலமாக போட்டு பழக்கி விட்டோம் என அனைத்து கட்சிகளுக்கும் வாக்கினை வழங்க முடியாது.
தமிழ் தேசியம்
இந்த பிரதேச மக்கள் தமிழ் தேசிய பேரவையை வெல்ல வைக்க வேண்டும்.யாரிடம் தமிழ் தேசியம் உண்டு .தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமே தமிழ் தேசயம் உள்ளது .
நான் முன்னர் இருந்த கட்சி இலங்கை தமிழரசு கட்சி (ITAK) இன்று அது ஒருவரின் தான்றோன்றிதனமாக ஒருவரது செயல்பாட்டினால் பலர் வெளியேறிவிட்டார்கள் .
அரசியல்ரீதியாக ஒரு கட்சி மக்களுக்காக அடிபடுகின்றார்கள். பதவிக்காக அந்த கட்சியை நீர்த்து போக செய்துவிட்டார்கள் நிலையான கட்சி இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாத்திரமே ஆகும் .
தேசிய மக்கள் சக்தி
இரண்டாவது சிந்தனை எமக்கு தேவையில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுமை மிக்கவர்களுக்கு உங்கள் வாக்கினை அளியுங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எம்மவர்களுக்கு சந்தரப்பத்தை வழங்குங்கள்.
எமக்கு பரம எதிரியாக இருந்து சத்தம் போடாது எமது இளைஞர்களை இழுத்து முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் மூன்று நாாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுமையற்றவர்கள் சிறிய அபிவிருத்தி கூட்டத்தினை கூட நடாத்த முடியாது திண்டாடுகின்றனர்.
கடற்றொழில் அமைச்சர்
அவர்கள் என்றாலும் பரவாயில்லை இவர்களுக்கு ஒரு படி மேலே சென்று கடற்றொழில் அமைச்சரின் செயற்பாடுகள் உள்ளது .
சுனாமி உட்பட மனிதாபிமான நடவடிக்கைகள் எதிர்ப்பு ,வடக்கு கிழக்கு இணைப்பு எங்கள் பிள்ளைகளின் தியாகத்தால் கிடைத்தது ஆனால் நீதிமன்றம் சென்று எமக்கு எதிராக வடக்கு கிழக்கினை பிரித்தார்கள். அரசியலமைப்பு விடயத்திலும் பின்நிற்கின்றார்கள்.
ஜேவிபிக்கு வாக்களிக்கும் மனமிருந்தால் ஏதோ ஓர் தமிழ் கட்சிக்கு வாக்களியுங்கள் அதிலும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
