தனியார் பேருந்து சங்கத்தின் முடிவால் மக்கள் அவதி...!
கொழும்பில் இருந்து மக்கள் புறப்படுவதற்கு போதுமான பேருந்துகளை வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தவறியுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கம் (IPPBA) அறிவித்துள்ளது.
இன்றைய தினமே (12) இந்த விடயத்தினை தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"மக்கள் தமது பேருந்துகளைப் பெறுவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தனியார் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறுகிய தூர பேருந்துகள்
கடந்த ஆண்டுகளில், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்துகளை ஏற்பாடு செய்ய தனியார் பேருந்து சங்கங்களுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆலோசித்தது.
இதற்கு முன்னர், குறுகிய தூர பேருந்துகளை தொலைதூர சேவைகளுக்கு ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை அத்தகைய முடிவு எடுக்கப்படவில்லை.
எனவே, போக்குவரத்து வசதிகளைப் பெற மக்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என்றார்.
வெடுக்குநாறி மலை விவகாரம்! அழையா விருந்தாளியாக உள்நுழைந்த சிவசேனை: எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வெளியேற்றம்
தொடருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, மக்கள் தமது கிராமங்களுக்கு செல்வதற்கு போதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்வதற்காக கூடுதலாக தொடருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது, அதற்கிணங்களும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்பவும் கூடுதலாக தொடரூந்துகளை ஒதுக்க புதிய ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |