ரஷ்யாவின் விடுத்துள்ள மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கை !
உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதனால் பிரித்தானியாவிற்கு ரஷ்யா மிரட்டல்களை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகளை அனுப்புவதை குறித்து, ரஷ்யா பிரித்தானியாவை நோக்கி நேரடியான மற்றும் அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு மன்ற செயலாளர், “பிரித்தானிய படைகள் உக்ரைனில் அமைக்கப்பட்டால் அது நேரடி மோதலுக்கு வழிவைக்கும் என்றும், இதனால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய கடற்படை
ரஷ்யா, அணு ஆயுதங்களை பயன்படுத்த தயார் எனவும், 1990 பிறகு முதன்முறையாக ஆர்க்டிக் பகுதியில் அணுகுண்டு சோதனை நடத்தும் திட்டத்தையும் எடுத்துள்ளது.
ரஷ்யா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை “தலைமைத்துவ ஆக்கிரமிப்பாளர்கள்” என குற்றம் சுமத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய கடற்படை, உக்ரைனின் Mykolaiv பகுதியில் கடற்படைத் தளத்திற்கான கட்டமைப்பை உருவாக்கியதையே போர் எச்சரிக்கைக்கான காரணமாக ரஷ்யா பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2030 இற்குள் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் போர் செய்ய தயாராகின்றன எனவும், ரஷ்யா எச்சரித்துள்ளது.
அணு ஆயுத திறன்
ரஷ்யாவின் அணு ஆயுத திறன் கொண்ட “அதிசய ஆயுதம்” Oreshnik, தற்போது பெலாரஸில் பயன்பாட்டில் உள்ளது.
புடினை கைது செய்யும் முயற்சிகள் “போர் அறிவிப்பாக” கருதப்படும் என்றும், அதனை மேற்கொள்ளும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா இடையே உள்ள பதற்றத்தை மேலும் தீவிரமாக்கும் வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இத்தகைய சூழ்நிலைகளில் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
