லண்டன் நகரங்களில் வேகமாக பரவும்100 நாள் இருமல்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
அதிகவில் தொற்றக்கூடிய 100 நாள் இருமல் எனப்படும் கக்குவான் இருமல் லண்டன் மாநகரங்களில் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 1,141 பேர் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட 26 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.
230 சதவீதம் அதிகம்
இந்த இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி கடுமையான இருமல் வரை முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருமல் 3 மாதங்கள் வரை நீடிக்கும் எனவே 100 நாள் இருமல் என்று அழைக்கப்படுகிறது.
வெயில் காலங்களில் இந்த நோய்த்தொற்றுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமல் 230 சதவீதம் அதிகரித்துள்ளது.
100 நாள் இருமல்
இந்த ஆண்டு இதுவரை லண்டன் பெருநகரமான ஹாக்னியில்தான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஹாக்னியில், 100 நாள் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளதுடன் விர்ரல் பகுதியில் 35 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த 100 நாள் இருமல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
NHS எச்சரிக்கை
இந்நிலையில், 100 நாள் இருமல் அபாயகரமானதாக இருக்கும் என தேசிய சுகாதார சேவை (NHS )எச்சரித்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குறிப்பாக நீரிழப்பு, சுவாசிப்பதில் சிரமம், நிமோனியா மற்றும் வலிப்புத்தாக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இருமலின் போது விலா எலும்புகள், குடலிறக்கம், காது தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |