பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின் நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் அதிகளவான இளைஞர்கள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக தினமும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்துள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் நாளாந்தம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்தார்.
இந்நாட்டில் பெரும்பான்மையான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இளைஞர்களின் இந்த செயற்பாடும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் அவர்களை நாட்டிலேயே தக்கவைத்துக்கொள்ள உரிய வேலைத்திட்டத்தை சம்பந்தப்பட்ட துறையினர் தயாரிக்க வேண்டுமெனவும் பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.