இலங்கையின் பிரபல பாடகர் மற்றும் மனைவி மகனுக்கு கொரோனா
corona
family
srilnka
famous singer
By Sumithiran
இலங்கையின் சிரேஷ்ட பாடகர் நுவன் குணவர்த்தன, அவரது மனைவி மற்றும் மகன் கயன் குணவர்தன ஆகிய அனைவரும் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் போது நேற்று கொவிட் தொற்று(08) உறுதி செய்யப்பட்டது.
நுவன் குணவர்தன தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நுவன் குணவர்த்தனவின் மகன் கயன் குணவர்தன தனது முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.