உதவி வைத்தியருக்கு கொரோனா தொற்று- மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட வைத்தியசாலை!
hospital
corona
closed
nuwara eliya
dayagama
By Kalaimathy
நுவரெலியா டயகம வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி வைத்தியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலை நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைத்தியருடன் தொடர்பைப் பேணிய 18 உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்களை வைத்திய சிகிச்சைக்காக அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ஜெயராஜன் குறிப்பிட்டுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்