நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
நுவரெலியா(Nuwara eliya) தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரத்தில் தபால் சேவைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா தபால் நிலையத்தை தபால் திணைக்களத்திலிருந்து நீக்கிவிட்டு அதை விற்க முன்னர் திட்டமிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் தீர்மானம்
முக்கிய தபால் நிலையங்களை தபால் சேவையை முன்னெடுப்பதற்கும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்குமே அரசு தீர்மானித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்தத் திட்டத்திற்காக நகர அபிவிருத்தி ஆணைக்குழு மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழுவிடம் இருந்து தொழில்நுட்ப ஆலோசனை பெறப்படும்.” என அமைச்சர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
