நுவரெலியா தபால் நிலையம் முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம்(படங்கள்)
பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கபட்டது.
குறித்த போராட்டம் இன்று (30.11.2023) மதிய உணவு இடைவேளையின் போது தபால் நிலையத்தை மூடி, அதற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க தபால் நிலையங்களை, குறுகிய கால இலாபத்துக்காக விற்பனை செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும்.
கோரிக்கை முன்வைப்பு
தபால் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைய நிவர்த்தி செய்யப்பட வேண்டும், வரவு - செலவுத் திட்டம் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெற்றது.

"2016 முதல் தபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. இதனால் திணைக்களத்தில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, புதிய நியமனம் வழங்கப்பட வேண்டும்." - என்று நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்."
தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கமைய 10 ஆயிரம் ரூபா போதாது, எனவேதான் 20 ஆயிரம் ரூபா கோரப்படுகின்றது." எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்