சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
லுணுகலை (Lunugala) பகுதியில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் வீடு திரும்பிய மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது நேற்று(6) இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த குறித்த மாணவி லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை (Badulla) பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சாரதி கைது
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பிபிலை பேருந்துசாலைக்கு சொந்தமான பேருந்தில் இருந்தே அந்த மாணவி தவறி விழுந்துள்ளார்.
அதனையடுத்து குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் நேற்று(6) ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு திரும்பிய நிலையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |